குஜராத் முன்னாள் அமைச்சா் கைது

குஜராத் முன்னாள் அமைச்சா் கைது

1 mins read
573fc602-ded3-4d8e-8edb-e6c840813397
-

காந்திநகர்: குஜ­ராத்­தில் பால் உற்­பத்­தி­யா­ளா்­கள் கூட்­டு­றவு சங்­கத்­தில் சுமாா் ரூ.800 கோடி முறை­கேடு நடை­பெற்­ற­தாக கூறப்­படும் வழக்­கில், அந்த மாநில முன்­னாள் உள்­துறை அமைச்சா் விபுல் செள­த­ரியை ஊழல் தடுப்­புத் துறை கைது செய்­துள்ளது.

மேசானா மாவட்­டத்­தில் உள்ள பால் உற்­பத்தி­யா­ளா்­கள் கூட்­டு­றவு சங்­கப் பணி­யா­ளா்­க­ளுக்கு ஊக்­கத்­தொகை வழங்க ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் ரூ.14.8 கோடி கையாடல் செய்­த­தாக கடந்த 2020ஆம் ஆண்டு குஜ­ராத் குற்­றப் புல­னாய்­வுத் துறை விபுல் செள­த­ரியை கைது செய்­தது குறிப்­பிடத்­தக்­கது.