மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: 40 இடங்களில் சோதனை

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: 40 இடங்களில் சோதனை

2 mins read
2bf65a12-b0e9-4834-8f42-7d7b91c4acce
-

புது­டெல்லி: டெல்­லி­யில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மது­பானக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தில் முறை­கேடு நடை­பெற்­ற­தாகக் கூறி மத்­திய அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் கடந்த 6ஆம் தேதி நாடு முழு­வ­தும் சுமார் 45 இடங்­களில் சோதனை நடத்­தி­னார்­கள். இந்த நிலை­யில் நேற்று 2வது கட்­ட­மாக நாடு முழு­வ­தும் 40 இடங்­களில் அம­லாக்­கப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் அதி­ரடிச் சோத­னை­யில் ஈடு­பட்டனர்.

மது­பானத் தொழி­ல­தி­பர்­கள், விநி­யோ­கிப்­பா­ளர்­கள் இத்­தொ­ழி­லில் உள்ள விநி­யோ­கச் சங்­கி­லித் தொட­ரில் இருப்­ப­வர்­க­ளுக்கு தொடர்புள்ள இடங்­களில் இச்­சோதனை நடை­பெற்றது.

ஆந்­தி­ரப் பிர­தே­சம், கர்­நா­டகா, தமிழ்­நாடு, டெல்லி, தெலுங்­கானா, மகா­ராஷ்­டிரா, ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தே­சம், கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­களில் மொத்­தம் 40க்கும் மேற்­பட்ட இடங்­களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அண்­மை­யில்தான் டெல்லி முதல்­வர் அர­விந்த் கேஜ்­ரி­வால் தமி­ழ­கம் வந்­தி­ருந்­தார். தமி­ழ­கத்­தில் அவர் அர­சுப் பள்­ளி­களில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று கல்­லூ­ரி­களில் சேர்ந்த மாண­வி­க­ளுக்கு மாதம் ரூ.1000 ஊக்­கத் தொகை வழங்­கும் புது­மைப் பெண் திட்­டத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

இந்த சோதனை டெல்லி அர­சி­யல் வட்­டா­ரத்­தில் மீண்­டும் பர­ப­ரப்­பைக் கிளப்­பி­யு­ள்ளது.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் டெல்லி அரசு புதிய மது­பா­னக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. இதன்­படி, டெல்லி பல மண்­ட­லங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு, 800க்கும் மேற்­பட்ட தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு மது­பா­னம் விற்க உரி­மம் வழங்­கப்­பட்­டது.

இதற்கு பல்­வேறு தரப்­பில் இருந்து விமர்­ச­னங்­கள் எழுந்­தன. இதை­ய­டுத்து, கடந்த ஜூலை­யில் புதிய மது­பா­னக் கொள்­கையை டெல்லி அரசு திரும்­பப்பெற்­றது.

இத­னி­டையே, மது­பா­னக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தில் பெரும் முறை­கேடு நடந்­துள்­ள­தாக டெல்லி துணை­நிலை ஆளு­நர் வினய்­கு­மார் சக்­சேனா குற்­றம்­ சாட்­டி­னார்.

துணை­நிலை ஆளு­ந­ரின் குற்­றச்­சாட்டை தொடர்ந்து, இது­தொடர்­பாக டெல்லி துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா உட்­பட 15 பேர் மீது மத்­திய புல­னாய்­வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்­தது. அதன்­பே­ரில் மணிஷ் சிசோ­டியா வீடு உட்­பட பல்­வேறு இடங்­களில் ஆக. 19ஆம் தேதி சிபிஐ அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். சிசோ­டி­யா­வின் வங்கி பாது­காப்­புப் பெட்­ட­கங்­க­ளி­லும் சோதனை நடத்­தப்­பட்­டது.