மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடிச் சோதனை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மத்தியப் புலனாய்வுத் துறையும், அமலாக்க இயக்குனரகமும் தேவையின்றி அனைவரையும் தொந்தரவு செய்து வருகின்றன.
"துணை நிலை ஆளுநர், பாஜக மற்றும் சிபிஐ ஆகியவை மதுபான ஊழலில் பல்வேறு அளவு பணத்தை மேற்கோள் காட்டியுள்ளன.
ஆனால் அது உண்மையில் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பாஜக தலைவர் ஒருவர் 8,000 கோடி ரூபாய் ஊழல் என்கிறார், துணை நிலை ஆளுநர் 144 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறார், சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் ஒரு கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறது. மதுபான ஊழல் என்றால் என்னவென்றே புரியவில்லை.
"இந்த நாடு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் அச்சத்தில் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

