புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இலகுரக ஹெலிகாப்டர் சீனா, பாகிஸ்தான் ராணுவத்துக்கு சவால் விடும் வகையில் ஆற்றல் கொண்டது என தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஆத்மநிர்பார்' என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி போர் விமானங்கள், ஏவுகணைகள், நவீன துப்பாக்கிகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அவை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சியாச்சின், லடாக் உள்ளிட்ட உயரமான மலைகளை உள்ளடக்கிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்காக அதிக எடையில்லாத போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன.
இதையடுத்து உள்ளூர் நிறுவனங்கள் மூலம் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ ஹெலிகாப்டர் அக்டோபர் 3ஆம் தேதி விமானப்படையில் சேர்க்கப்படும்.

