மும்பை: அரசியல் தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான இருநூறு கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தொடர்பாக இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்காக முன்னிலை யாக வேண்டும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த
வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

