(காணொளி) விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் விருந்து

(காணொளி) விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் விருந்து

1 mins read
5ddc7f8b-2120-4692-9592-1b48ed69ec50
படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் சிலருக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. காணொளியை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்காக கபடி போட்டி நடைபெற்றது. போட்டியாளர்களுக்கு மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோறு, காய்கறிகள், பூரி ஆகிய உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றை பரிமாறிய முறைதான் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஆண்கள் கழிவறை தரையில் சாப்பாடு பாத்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றிலிருந்து பெண்கள் உணவை தங்கள் தட்டைகளில் பரிமாறிகொள்வது காணொளியில் தெளிவாக தெரிகிறது. உணவை தட்டையில் போட்டுகொண்டு பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே செல்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அம்மாநிலத்தின் விளையாட்டு அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேறு இடம் இல்லாததால், உணவை கழிவறையில் வைத்ததாக அவர் கூறினார். இந்த ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.