சண்டிகர் பல்கலை விவகாரம்: மூவர் கைது

சண்டிகர் பல்கலை விவகாரம்: மூவர் கைது

1 mins read
952df526-3067-4838-8dfe-cec11f69a421
-

சண்­டி­கர்: சண்­டி­கர் பல்­க­லைக்­கழகத்­தில் மாண­வி­கள் பலர் குளிக்­கும் காட்­சி­கள் கொண்ட காணொ­ளிப் பதி­வு­கள் இணை­யத்­தில் வெளி­யா­னது தொடர்­பாக மூன்று பேர் கைதாகி உள்­ள­னர்.

அவர்­களை ஏழு நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க நீதி­மன்­றம் அனு­மதி வழங்கி உள்­ளது.

மொத்­தம் அறு­பது மாண­வி­களின் காணொ­ளி­களை, பட்ட மேற்­ப­டிப்பு பயின்று வரும் மாணவி ஒரு­வர் ரக­சி­ய­மா­கப் பதிவு செய்து, அவற்றை தமது நண்­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளார். பின்­னர் அந்த நண்­பர் இணை­யத்­தில் அவற்றை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது. இந்­நி­லை­யில், காணொ­ளி­யைப் பதிவு செய்த மாண­வி­யும் அவ­ரது நண்­பர் இரு­வ­ரும் கைதா­கி­னர்.

இதற்­கி­டையே, இந்த வழக்கை விசா­ரிக்க மூன்று ஐபி­எஸ் பெண் அதி­கா­ரி­கள் அடங்­கிய சிறப்­புக் குழுவை அம்­மா­நில அரசு அமைத்­துள்­ளது.

இதற்­கி­டையே, இந்த விவ­கா­ரத்தை முன்­வைத்து மாண­வி­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­ததை அடுத்து, எதிர்­வ­ரும் 24ஆம் தேதி வரை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், மாண­வி­கள் சிலரை கன­டா­வில் இருந்து தொடர்பு­கொண்ட சிலர், குளியலறைக் காணொ­ளி­கள் தங்­க­ளி­டம் உள்­ள­தா­க­வும் அவற்றை வெளி­யிடப் போவ­தா­க­வும் மிரட்­டல் விடுத்­துள்­ள­னர்.