ரஷ்யாவால் மிச்சமானது ரூ.35,000 கோடி

ரஷ்யாவால் மிச்சமானது ரூ.35,000 கோடி

1 mins read
0bf898c2-46a1-472b-8243-a15634e6cabf
-

புது­டெல்லி: ரஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்­த­தன் மூலம் இது­வரை ரூ.35 ஆயி­ரம் கோடி மிச்­ச­மாகி உள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

பல்­வேறு உலக நாடு­க­ளின் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் ரஷ்ய கச்சா எண்­ணெய்யை மிக மலி­வான விலை­யில் வாங்குகிறது இந்­தியா.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­தி­ருப்­பதை அடுத்து, அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­கள் ரஷ்யா மீது பொரு­ளி­யல் தடை­களை விதித்­துள்­ளது. இத­னால் நிதி நெருக்­க­டியை எதிர்­கொண்டுள்­ளது ரஷ்யா.

இத்­த­கைய சூழ­லில் கச்சா எண்­ணெய் சந்­தை­யில் ஆதிக்­கம் செலுத்­தும் ரஷ்யா, இந்த நெருக்­கடியைச் சமா­ளிக்க மிக மலி­வான விலை­யில் கச்சா எண்­ணெய்யை விற்­பனை செய்ய முன்­வந்­துள்­ளது.

இந்த வாய்ப்பை இந்­திய அரசு தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­படுத்திக் கொண்டு, வழக்­கத்­தை­விட இரு­மடங்கு கச்சா எண்­ணெய்யை இறக்கு­மதி செய்­தது.

மேலும், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான ஏற்­று­மதி, இறக்­கு­மதி வர்த்­த­க­மா­னது முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் 150 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

குறைந்த விலை­யில் கச்சா எண்­ணெய் கிடைத்­த­போ­தும், இந்­தி­யா­வில் பெட்­ரோல் விலை தொடர்ந்து அதி­க­ரித்­த­தற்கு எதிர்ப்பு கிளம்­பி­யது. இந்­நி­லை­யில், அண்­மைய சில வாரங்­க­ளாக பெட்­ரோல், டீசல் விலை உயர்த்­தப்­ப­ட­வில்லை.