'பள்ளிப்பாடத் திட்டத்தில் பகவத் கீதை'

'பள்ளிப்பாடத் திட்டத்தில் பகவத் கீதை'

1 mins read
0fbb1a41-6582-4af1-b0b6-72a345f61622
-
Google News Preferred Icon

பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது உள்ள பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் பகவத்கீதை போதனைகள் சேர்க்கப்படாது என்று அம்மாநில அமைச்சர் பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

"எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத்திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த பாடத்தில் பகவத்கீதை போதனைகளும் குழந்தை களுக்கு கற்பிக்கப்படும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைத்துள்ளோம்," என்றார் அமைச்சர்.