சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஏறி 4 பேர் மரணம்

சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஏறி 4 பேர் மரணம்

1 mins read
eeef4ddb-a00f-4a42-bc5b-fd9056780114
படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

இந்தியாவின் புதுடில்லியில் சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஒரு கனரக வாகனம் ஏறியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டன.

நள்ளிரவு தாண்டி அதிவேகமாக வந்த வாகனம் தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. சம்பவ இடத்திலே இருவர் மாண்டனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். நான்காவது நபர் சிகிச்சை பலனின்றி மடிந்தார்.

விபத்தை ஏற்படுத்திய பின் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை கண்டுபிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர். .