சுகாதாரம், கல்வி, பொருளியல் வாய்ப்புகள் ஆகியவற்றில் வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா சிறப்பாக இருப்பதாக அண்மை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் பிறக்கும் குழந்தைகள் வட மாநிலக் குழந்தைகளைவிட ஆரோக்கியமான, வளமான, கூடுதல் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.
விடுதலை பெற்றபோது குறைவான வளர்ச்சி பெற்றிருந்த தென்னிந்திய மாநிலங்கள் 1980களுக்குப் பிறகு மேம்பாடு கண்டதாக ஆய்வு சொல்லிற்று.
இருப்பினும், வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் மக்கள்தொகை உயர்வு குறைவாகவே பதிவானதாகக் கூறப்பட்டது.
'பிபிசி' செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.


