பஞ்சாப் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

பஞ்சாப் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

1 mins read
d7703ef6-8417-451a-854b-6bd022d5ec2f
ஆளுநர் மாளிகையை நெருங்கும் முன்பே தடுக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநில ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­கித், அம்­மா­நில அர­சுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­வ­தாக ஆளும் ஆம் ஆத்மி கட்­சித் தலைமை குற்­றம்­சாட்டி உள்­ளது.

மாநில அர­சைக் கலைப்­ப­தற்­காக ஆம் ஆத்மி கட்­சி­யின் எம்­எல்­ஏக்­களை விலைக்கு வாங்க குதி­ரைப்­பே­ரம் நடப்­ப­தா­க­வும் இதற்­காக 'ஆப­ரே­சன் தாமரை' திட்­டத்தை பாஜக செயல்­ப­டுத்த முயற்­சி செய்வ தா­க­வும் ஆம் ஆத்மி கூறி­யுள்­ளது.

ஆம் ஆத்மி எம்­எல்­ஏக்­கள் பத்து பேரை பாஜக விலைக்கு வாங்­கி­விட்­ட­தாக தக­வல் பர­வி­யதை அடுத்து, சட்­டப்­பே­ர­வை­யில் தனது அர­சுக்கு உள்ள பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முதல்­வர் பக­வந்த் மான் முடிவு செய்­தார்.

இதை­ய­டுத்து, ஆளு­நர் ஒப்­பு­த­லு­டன் நேற்று பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வை­யின் சிறப்­புக் கூட்­டம் நடை­பெற இருந்­தது.

இந்­நி­லை­யில், இந்­தக் கூட்­டத்தை திடீ­ரென ஆளு­நர் ரத்து செய்­துள்­ளார். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஆளுநரின் முடிவை எதிர்த்து ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணியையும் நடத்தியது.

ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநர் மேற்கொண்ட 'ஆபரேசன் தாமரை' திட்டம் படுதோல்வி கண்டுவிட்டது என்றும் அக்கட்சித் தலைமை தெரிவித்தது.