ரூ.22,842 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் கைது

இந்தியாவின் ஆகப்பெரிய வங்கி மோசடி எனத் தகவல்

அக­ம­தா­பாத்: வங்­கி­களில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதைத் திருப்­பிச் செலுத்­தா­மல் மோசடி செய்­த­தாக எழுந்த புகா­ரின் பேரில், பிர­பல கப்­பல் கட்டு­மான நிறு­வ­னத்­தின் தலை­வர் ரிஷி கம­லேஷ் அகர்­வால் சிபிஐ அதி­கா­ரி­க­ளால் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, வங்­கி­யில் கடன் பெற்று திருப்­பிச் செலுத்­தாத தொழி­ல­தி­பர்­க­ளின் பட்­டி­ய­லில் இவ­ரது பெய­ரும் இடம்­பெற்­றுள்­ளது.

‘ஏபிஜி ஷிப் யார்ட்’ நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான ரிஷி கம­லேஷ் அகர்­வால், ஐசி­ஐ­சிஐ உள்­ளிட்ட 28 வங்­கி­களில், பல்­வேறு கார­ணங்­க­ளைத் தெரி­வித்து ரூ.22,842 கோடி கடன் பெற்­றுள்­ளார். இந்­நி­று­வ­னம் குஜ­ராத் மாநி­லம், சூரத்தை தலை­மை­யி­ட­மாக கொண்டு இயங்கி வந்­தது.

கடன் தவ­ணையை முறை­யா­கச் செலுத்­தா­த­தால் கடன் கொடுத்த வங்­கி­கள் ரிஷி கம­லேஷ் மீது நட­வ­டிக்கை எடுக்க முடிவு செய்­தன. அவர் தமது நிறு­வ­னத்­துக்­காக பாரத ஸ்டேட் வங்­கி­யில் மட்­டும் ரூ.2,468.51 கோடி­யைக் கட­னா­கப் பெற்­றுள்­ளார்.

இந்நிலையில், ‘எர்ன்ஸ் அண்ட் யங்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம், கடந்த 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது தொழில் பங்குதாரர்களும் பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

குறிப்­பாக, குற்­றச்­சதி, மோசடி, நம்­பிக்கை மோசடி, அர­சுப் பத­வி­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்­களை இவர்­கள் தங்­கள் நிறு­வ­னத்­தின் பெய­ரால் செய்­துள்­ள­தா­கப் புகார்­கள் எழுந்­தன.

இதன் எதி­ரொ­லி­யாக, ரிஷி கம­லேஷ் அகர்­வா­லும் அவ­ரது கூட்­டா­ளி­களும் சிபிஐ விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். பின்­னர் அவர்­கள் மீது வழக்­கு­கள் பதி­வா­கின.

பல்­வேறு வங்­கி­களில் இருந்து குறிப்­பிட்ட கார­ணங்­களை முன்­வைத்து கடன் பெற்ற ரிஷி அகர்­வால் தரப்­பி­னர், உரிய கார­ணங்­க­ளுக்­காக செல­வி­ட­வில்லை என்­றும் வேறு பல வழி­களில் செல­விட்­டுள்­ள­னர் என்­றும் சிபிஐ குற்­றம்­சாட்டி உள்­ளது.

இத­னால் அவர் பெற்ற கடன் தொகை­யா­னது, வாராக்­க­ட­னாக அறி­விக்­கப்­பட்­டது. இது­தான் நாட்­டின் மிகப்­பெ­ரிய வங்கி மோசடி எனக் கரு­தப்­ப­டு­கிறது.

இதன் மூலம் வங்­கிக்­க­டன் மோச­டி­யில் ஈடு­பட்ட பிர­பல தொழில் அதி­பர்­கள் விஜய் மல்­லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகி­யோ­ரின் பட்­டி­ய­லில், ரிஷி கம­லே­ஷும் இடம்­பி­டித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!