பெண்களுக்கு ஒரு கோடி இலவச சேலைகள்; நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு

ஹைத­ரா­பாத்: ஒரு கோடி பெண்­க­ளுக்கு இல­வ­சப் புடவை வழங்­கும் நட­வ­டிக்கை தெலுங்­கா­னா­வில் நேற்று தொடங்­கி­யது.

ஆண்­டு­தோ­றும் நவ­ராத்­திரி பண்­டிகை வேளை­யில் தெலுங்­கானா மக்­கள், பது­கம்மா என்ற பண்­டி­கை­யைக் கொண்­டா­டு­வது வழக்­கம்.

இது திரு­ம­ண­மான பெண்­கள் தாய் வீட்­டுக்­குத் திரும்பி வரு­வ­தைக் குறிக்­கும் வகை­யில் கொண்­டா­டப்­ப­டு­கிறது. இச்­ச­ம­யம் புட­வை­யு­டன் மேலும் சில பொருள்­கள் சீர்­வ­ரி­சை­யா­கப் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

இந்­நி­லை­யில், தெலுங்­கானா முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்ற சந்­தி­ர­சே­கர ராவ், பது­கம்மா பண்­டி­கை­யின்­போது, அம்­மா­நில பெண்­க­ளுக்கு இல­வ­ச­மாக சேலை வழங்­கப்­படும் என கடந்த 2017ஆம் ஆண்டு அறி­வித்­தார்.

அதன்­படி, நேற்று முதல் இல­வச சேவை­க­ளின் விநி­யோ­கம் தொடங்­கி­யது என்­றும் நெச­வா­ளர்­களை ஆத­ரிப்­ப­தை­யும் பெண்­களுக்கு ஒரு சிறிய பரிசு வழங்­கு­வ­தை­யும் நோக்­க­மா­கக் கொண்டு அரசு இத்­திட்­டத்தை அறி­மு­கப்­படுத்தி உள்­ள­தாக தெலுங்­கானா ஜவுளி, கைத்­த­றித் துறை அமைச்­சர் கே.டி.ராம­ராவ் தெரி­வித்­தார்.

கொரோனா உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­க­ளால் விவ­சா­யி­கள் கடும் நெருக்­க­டி­யில் உள்­ள­னர் என்­றும் அர­சின் இல­வச சேலைத் திட்­டத்­தால் நெச­வா­ளர்­க­ளின் வரு­மா­னம் இரட்­டிப்­பா­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“நெச­வா­ளர்­க­ளுக்கு ஆண்டு முழு­வ­தும் வேலை­வாய்ப்பை உறுதி செய்­யும் வகை­யில், பது­க­மம்மா சேலை­கள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது. இத்­திட்­டத்­துக்­காக தெலுங்­கானா அரசு நடப்­பாண்­டில், 339.73 கோடி ரூபாய் செல­வி­டு­கிறது. மேலும் இந்த முறை பல்­வேறு வண்­ணங்­கள், வடி­வ­மைப்­பு­க­ளு­டன் அழ­கான புட­வை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன ,” என்­றார் அமைச்­சர் ராம­ராவ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!