'ஆளுநர் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறியது'

'ஆளுநர் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறியது'

1 mins read
dd87c3a8-413e-4e64-892a-206f6553b36d
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள அரசு குறித்து அம்­மா­நில ஆளு­நர் ஆரிப் முகம்­மது கான் வெளிப்­ப­டை­யாக குற்­றம்­சாட்­டு­வ­தால் தாம் அதற்கு விளக்­கம் அளிக்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஆளு­நர் அலு­வ­ல­கம் அர­சி­யல் சூழ்ச்சி மைய­மாக மாறி வரு­கிறது என்று விமர்­சித்­தார்.

"அர­சு­டன் கருத்து வேறு­பாடு இருந்­தால் அதை கூறு­வ­தற்கு சில வழி­மு­றை­கள் உள்­ளன. அவர் வெளிப்­ப­டை­யாக அரசை குற்­றம்­சாட்­டு­வ­தால் தான் நானும் அதற்கு விளக்­கம் அளிக்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

"அமைச்­ச­ர­வை­யின் முடிவை நிரா­க­ரிக்க ஆளு­ந­ருக்கு அதி­கா­ரம் இல்லை என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதை ஆளு­நர் மன­தில் கொள்ள வேண்­டும்," என்­றார் முதல்­வர் பின­ராயி விஜ­யன்.

எந்த ஓர் அமைப்­பு­ட­னும் ஆளு­நர் தொடர்­பில் இருக்­கக்­கூ­டாது என்று விதி­முறை இருக்­கும்­போது, தமக்கு ஆர்­எஸ்­எஸ் இயக்­கத்­து­டன் தொடர்­புண்டு என்று ஆளு­நர் கூறி­ய­தா­கச் சுட்­டிக்­காட்­டிய அவர், அர­சி­ய­ல­மைப்­பின் உய­ரிய பொறுப்­பில் இருக்­கும் ஒரு­வர் இவ்­வாறு கூற­லாமா எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

கடந்த சில வாரங்களாக கேரள ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நேரடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது.