அதிர்ச்சித் தகவல்: பணியின்போது கண்ணயரும் 66% விமானிகள்

மும்பை: பகல் நேரத்­தில் விமானி அறை­யில் இருந்­த­ப­டியே கண்­ண­யர்­வ­துண்டு என்று இந்­திய விமானி­களில் மூவ­ரில் இரு­வர் தெரி­வித்­தி­ருப்­பது அதிர்ச்சி அளித்­துள்­ளது. களைப்­பு­தான் இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

'சேஃப்டி மேட்­டர்ஸ் ஃபவுண்­டே­ஷன்' எனும் லாப நோக்­கற்ற அமைப்பு மேற்­கொண்ட ஆய்­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

வட்­டார, உள்­நாட்டு, அனைத்­து­லக விமா­னி­கள் என 542 பேர் இந்த ஆய்­வில் பங்­கெ­டுத்­த­னர். அவர்­களில் கிட்­டத்­தட்ட 66 விழுக்­காட்­டி­னர், விமா­னப் பய­ணத்­தின்­போது சக விமா­னப் பணி­யா­ளர்­களி­டம் எது­வும் தெரி­விக்­கா­மல் பகல் நேரத்­தில் உறங்­கு­வ­துண்டு என்­பதை ஒப்­புக்­கொண்­ட­னர்.

"விமா­னி­கள் தெரி­வித்த பதில்­களின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, அவர்­களில் 54 விழுக்­காட்­டி­னர் தீவிர பகல்­நேர தூக்­கக்­கலக்­கத்­தா­லும் 41 விழுக்­காட்­டி­னர் மித­மான தூக்­கக்­க­லக்­கத்­தா­லும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டது," என்று அந்த ஆய்வு முடிவு கூறு­கிறது.

அதன் கார­ண­மா­கவே, அவர்­களில் 66 விழுக்­காட்­டி­னர் விமானி அறை­யி­லேயே குட்­டித்­தூக்­கம் போடு­வ­தாக அல்­லது தங்­களை அறி­யா­ம­லேயே கண்­ண­யர்ந்து விடு­வதா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

விமான விபத்­து­க­ளுக்­குக் களைப்பு ஒரு முக்­கி­யக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது. 2010ஆம் ஆண்டு மங்­க­ளூ­ரில் 158 பேரைப் பலி­கொண்ட விமான விபத்­துக்­கும் இது ஒரு கார­ண­மா­கக் கூறப்­பட்டது.

அந்த 2 மணி 5 நிமி­டப் பய­ணத்­தின்­போது விமானி 1 மணி 40 நிமி­டங்­க­ளுக்கு உறக்­கத்­தில் இருந்­தார் என்று விமானி அறை­யி­லுள்ள குரல்­ப­தி­வுக் கருவி காட்­டி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அடுத்­த­டுத்த நாள்கள் காலை­யில் விமா­னத்தை இயக்­கு­வது, விமானி­கள் களைப்­ப­டை­ய 74% கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

"காலை 6 மணிக்கு விமா­னத்­தைக் கிளப்ப வேண்­டு­மெ­னில், அதி­காலை 3-3.30 மணிக்குள் எழுந்­திருக்க வேண்­டும் என்று பெரும்­பா­லான விமா­னி­கள் கூறு­கின்­ற­னர். இத­னால், இர­வின் முக்­கி­ய­மான நேரத்­தில் அவர்­க­ளுக்கு ஓய்வு கிட்­டா­மல் போய்­வி­டு­கிறது," என்­றார் 'சேஃப்டி மேட்­டர்ஸ் ஃபவுண்­டே­ஷன்' அமைப்­பின் நிறு­வ­ன­ரான கேப்­டன் அமித் சிங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!