வேலை மோசடி: மியன்மாரில் சிக்கியுள்ள 100-150 இந்தியர்களை மீட்க முயற்சி

ஹைத­ரா­பாத்: மியன்­மா­ரில் வேலை­வாய்ப்பு மோச­டி­யில் தொடர்­புள்ள நான்கு நிறு­வ­னங்­களை அடை­யா­ளம் கண்­டுள்­ள­தா­க­வும் அங்கு சிக்­கி­யுள்ள 100-150 இந்­தி­யர்­களை மீட்க முயற்சி மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இது­வரை 32 பேர் மீட்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

ஆனால், குறைந்­தது 500 இந்­தி­யர்­கள் அங்கு சிக்­கி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது என்று மீட்­கப்­பட்­ட­வர்­களில் சிலர் கூறி­ய­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி தெரி­வித்­தது.

ஒவ்­வொரு நாளும் குறைந்­தது 10-20 இந்­தி­யர்­கள் மியன்­மா­ரின் மியாவாடி, மே சாட் பகு­தி­க­ளுக்கு அழைத்­து­வ­ரப்­ப­டு­வதா­கக் கூறப்­பட்­டது.

"இது­வரை, சூப்­பர் எனர்ஜி, லஸாடா, ஸெந்­தி­யன் குழு­மம், துபா­யைத் தள­மா­கக் கொண்ட ஓகே­எக்ஸ் பிளஸ் ஆகிய நான்கு நிறு­வனங்­கள் அவ்வேலை­வாய்ப்­பு­களை வழங்­கி­ய­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது," என்று புலம்­பெ­யர்ந்­தோர் பாது­காப்பு அலு­வ­லக (ஹைத­ரா­பாத்) அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த வேலை மோச­டி­யில் சிக்­கிய இந்­திய தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­நர்­க­ளைச் சீனப் பெண்­கள்­போ­லக் காட்டி, மின்­னி­லக்க நாணய முத­லீடு என்ற பெய­ரில் அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­க­ளைச் சேர்ந்­தோ­ரி­ட­மி­ருந்து அதிக அள­வில் பண­மோ­சடி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த அறிக்கை கூறி­யது.

தாய்­லாந்து-மியன்­மார் எல்­லைப் பகு­தி­யில் அமைந்­துள்ள மியாவாடிப் பகுதி பெரும்­பா­லும் சீனர்­களின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. அங்கு பல தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்­றன.

"நாங்­கள் உயி­ரு­டன் திரும்ப வேண்­டு­மெ­னில், இந்­திய அரசு உடனே நட­வ­டிக்கை எடுத்­தாக வேண்­டும்," என்று அங்கு சிக்­கி­யுள்ள, மும்­பை­யைச் சேர்ந்த தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­நர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இவ்­வாறு வேலை நாடு­வோர், தரை­யி­றங்­கி­ய­பின் விசா பெற்­றுக்­கொள்­ளும் முறை­யில் பேங்­காக் சென்று, பின்­னர் விரை­வாக மியன்­மா­ருக்கு அழைத்­துச் செல்­லப்­படு­வதா­கக் கூறப்­ப­டு­கிறது. இது­குறித்து கடந்த ஜூலை­யில் முதன்­மு­த­லில் தெரி­ய­வந்­தது.

"அது­மு­தல், தாய்­லாந்து, மியன்­மா­ரில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கங்­கள் மூல­மாக மியன்­மா­ரில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றோம். யங்­கூன், பேங்­காக்­கில் உள்ள தூத­ர­கங்­கள் மூல­மாக அறி­வு­றுத்­தல்­களை விடுத்து வரு­கிறோம்," என்று புலம்­பெ­யர்ந்­தோர் பாது­காப்பு அலு­வ­ல­கம் தெரி­வித்­திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!