பிரதமர் மோடி பேரணியில் தாக்குதல் நடத்த சதி

பிரதமர் மோடி பேரணியில் தாக்குதல் நடத்த சதி

1 mins read
4e58aaf4-9fb0-4a98-a21c-b6a2c09c1a56
-

புது­டெல்லி: இவ்­வாண்டு ஜூலை 12ஆம் தேதி பீகார் தலை­ந­கர் பாட்­னா­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி பங்­கேற்ற பேர­ணி­யில் தாக்­கு­தல் நடத்த 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா (பிஎ­ஃப்ஐ)' அமைப்பு திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக அம­லாக்­கத் துறை தெரி­வித்­துள்­ளது. அதற்­காக அவ்­வ­மைப்பு ஒரு பயிற்சி முகாமை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தா­க­வும் சொல்­லப்­பட்­டது.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் துணை­போ­வ­தா­கக் கிட்­டிய தக­வலை அடுத்து, நாட்­டின் பல மாநி­லங்­களில் தேசிய புல­னாய்­வுப் பிரிவு அதி­ர­டிச் சோத­னை­களை நடத்தி, 'பிஎ­ஃப்ஐ' அமைப்­பைச் சேர்ந்த பல­ரைக் கைது­செய்­த­து.

இந்­நி­லை­யில், அந்த அமைப்­பினர் கடந்த பல ஆண்­டு­க­ளாக ரூ.120 கோடி நிதி திரட்­டி­யதை அம­லாக்­கத் துறை கண்­டு­பி­டித்­துள்­ளது. அப்­ப­ணத்­தைக் கொண்டு ஆயு­தங்­க­ளை­யும் வெடி­பொ­ருள்­களை­யும் திரட்டி, நாட்­டின் பல இடங்­க­ளி­லும் வன்­மு­றை­யை­யும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள அவர்­கள் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, சுய­தீ­வி­ர­வாத அமைப்­பான 'பிஎ­ஃப்ஐ'யிட­மி­ருந்து வில­கி­யி­ருக்­கு­மாறு முஸ்­லிம் சமூ­கத்தையும் அதற்­குத் தடைவிதிக்க வேண்­டு­மென அர­சாங்­கத்தையும் 'அனைத்­திந்­திய முஸ்­லிம் ஜமாத்' கேட்டுக்கொண்டுள்ளது.