திருப்பதி: பெண் ஒருவர் தம் கணவனை அவரின் முன்னாள் காதலிக்குத் திருமணம் செய்துவைத்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 'டிக்டாக்' காணொளிமூலம் பழக்கமாகி, ஈராண்டுகளுக்குமுன் கல்யாண்-விமலா திருமணம் செய்துகொண்டனர். அதற்குமுன்பே நித்யஸ்ரீ என்பவரைக் காதலித்துப் பிரிந்து விட்டார் கல்யாண். அண்மையில் விமலாவைச் சந்தித்த நித்யஸ்ரீ, தம்மால் கல்யாணைப் பிரிந்து வாழ முடியவில்லை என மன்றாடினார். அதனைத் தொடர்ந்து, தாமே முன்னின்று தம் கணவருக்கு நித்யஸ்ரீயை மணமுடித்து வைத்தார் விமலா. இப்போது மூவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். படம்: இந்திய ஊடகம்
முன்னாள் காதலியைக் கணவருக்கு மணமுடித்து வைத்த முதல் மனைவி
1 mins read
-

