‘வெளிநாடுகளில் வேலைதேடுவோர் கவனமாகச் செயல்பட வேண்டும்’

புது­டெல்லி: வேலைக்­காக வெளி­நாடு செல்­வோர் அங்கு வேலை­தரும் நிறு­வ­னங்­கள் குறித்­தும் வேலை­வாய்ப்பு முக­வர்­கள் குறித்­தும் நன்கு விசா­ரித்­துத் தெரிந்­து­கொண்ட பிறகே அந்­நா­டு­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்று வெளி­யு­றவு அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அண்­மை­யில், வேலை­வாய்ப்பு முக­வர்­க­ளின் பேச்சை நம்­பித் தாய்­லாந்து சென்ற 50 தமி­ழர்­கள் உள்­பட 300 இந்­தி­யர்­கள் தாய்­லாந்து-மியன்­மார் எல்­லை­யில் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­த­ன. இதை­ய­டுத்து மத்­திய அர­சின் ஆலோ­சனை வெளி­யா­னது.

தாய்­லாந்­தில் மென்­பொ­ருள் துறை­யில் வேலை செய்­வ­தற்­காக, இவ்­வாண்டு ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்­களில், தனி­யார் நிறு­வ­னம் ஒன்று நேர்­மு­கத் தேர்வு நடத்­தி­யது. கேர­ளா­வின் கொச்சி, தெலுங்­கானா மாநி­லத்­தின் ஹைத­ரா­பாத் ஆகிய நக­ரங்­களில் இந்த நேர்­மு­கத் தேர்­வு­கள் இடம்­பெற்­றன.

இரு நக­ரங்­களில் இருந்­தும் 100 மென்­பொ­றி­யா­ளர்­கள் தேர்­வு­செய்­யப்­பட்டு தாய்­லாந்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

அங்கு சென்று சேர்ந்­த­வு­டன் அவர்­கள் மியன்­மா­ருக்கு கடத்­திச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் இணைய வழிக் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

மறுத்­த­வர்­களை அடித்து, உதைத்­த­து­டன் சரி­யாக உணவு தரா­மல் கொடு­மைப்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

மியான்­மா­ரில் சிக்­கித் தவிக்­கும் இளை­ஞர்­களை மீட்க மத்­திய அரசு தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. அண்­மை­யில் மியா­வடி நக­ரி­லி­ருந்து 30 இளை­யர்­கள் மீட்­கப்­பட்­டதை அவை சுட்­டின.

இந்­நி­லை­யில், சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு விளம்­ப­ரங்­களை நம்­ப­வேண்­டாம் என்று வெளி­யு­றவு அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

மேலும், "வேலை தரு­வ­தா­கக் கூறும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், அவற்­றின் வேலை­வாய்ப்பு முக­வர்­கள் குறித்து, இந்­தி­யா­வில் அமைந்­தி­ருக்­கும் அந்­தந்த நாட்­டுத் தூதர­கங்­களில் விசா­ரிக்­க­லாம். அந்த நிறு­வ­னங்­க­ளின் நம்­ப­கத்தன்­மையை உறு­தி­செய்த பிறகே வெளி­நாட்டு வேலைக்குச் செல்ல வேண்­டும். வெளி­நாட்டு வேலை வாய்ப்­புக்­கான மாநில, மத்­திய அர­சாங்­கங்­க­ளின் துறை­க­ளி­லும் விசா­ரித்­துத் தெரிந்துகொள்­ள­லாம்," என்று அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்டு­ உள்­ளது.

வேலை தரும் நிறு­வ­னத்­தைப்­பற்றி ஏற்கெனவே அதில் வேலைக்குச் சேர்ந்­த­வர்­களை நாடி தக­வல்­களைச் சரி­பார்த்­துக்­கொள்­ளும்­படி­யும் அமைச்சு ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!