ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று சிக்கியது.
அந்தச் சாலை புதிதாகப் போடப்பட்டது என்றும் அதில் அன்றாடம் ஏராளமான வாகனங்கள் சென்றுவருவதாகவும் கூறப்பட்டது.
நேற்றுக் காலை அந்த வழியாக 'ஸ்கூட்டி' ரக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சாலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட பள்ளத்திற்குள் நிலைதடுமாறி விழுந்தார்.
பொதுமக்கள் அவரை மீட்டு, அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர். பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைத்து காவல்துறையினர் போக்குவரத்தைத் திசை திருப்பிவிட்டனர். வாகனத்தைப் பள்ளத்தில் இருந்து மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

