அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஓர் அமெரிக்க டாலருக்கு 81.52 ரூபாய் என்றானது. முன்னதாக இந்த மதிப்பு 80.99ஆக இருந்தது.
பிரிட்டிஷ் பவுன்ட் மதிப்பின் சரிவு, அமெரிக்காவின் மைய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த, டாலர் மதிப்பும் தொடர்ந்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
சரிவு தொடரும் என்றும் 85 முதல் 90 ரூபாய் வரை இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக நிதிச் சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இந்தியப் பங்குச் சந்தையிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.


