பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

1 mins read
81bb98c1-f626-48d2-bcbe-9da9f1597b95
படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

சிறிய ரகப் பேருந்து பள்­ளத்­தாக்­கில் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் 7 பேர் மாண்­ட­னர். இத்­து­ய­ரச் சம்­ப­வம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குளு எனம் இடத்தில் நடந்தது.

மாண்டவர்களில் மூன்று கல்லுாரி மாணவர்களும் அடங்குவர் எனக் கூறப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் சுற்றுப்பயணத்துக்காக சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து பேர் சம்பவ இடத்திலே மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டனர். மேலும் பத்து பேருக்கு காயம் ஏற்பட்டது.

இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் சம்பவம் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்துகொண்டார்.