பாஜகவுக்கு எதிரான அணி: முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் சந்திப்பு

புது­டெல்லி: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஆளும் பாஜ­க­வுக்கு எதி­ராக முக்­கிய எதிர்க்­கட்­சி­களை உள்­ள­டக்­கிய அணியை உரு­வாக்­கும் முயற்சி தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இது தொடர்­பாக பீகார் முதல்­வர் நிதிஷ்­கு­மா­ரும் ராஷ்­டி­ரிய ஜனதா தள தலை­வர் லாலு பிர­சாத் யாத­வும் டெல்­லி­யில் காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தியைச் சந்­தித்­துப் பேசி­னர்.

பாஜ­க­வுக்கு எதி­ராக எதிர்க்­கட்சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான முயற்­சி­களை தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், மேற்­கு­ வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி ஆகிய இரு­வ­ரும் மேற்­கொண்­டுள்­ள­னர்.

எனி­னும் எதிர்க்­கட்­சி­கள் அணிக்கு காங்­கி­ரஸ் தலை­மை­ஏற்­ப­தில் கருத்து வேறு­பாடு நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில் டெல்­லி­யில் சோனியா காந்­தியைச் சந்­தித்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய நிதிஷ் குமார், நாட்டை முன்­னெடுத்துச் செல்ல அனைத்து எதிர்க்­கட்­சி­களும் கைகோக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது என்­றார். காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் தேர்­த­லுக்குப் பின் இது­கு­றித்த உறு­தி­யான திட்­டம் வகுக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பாஜகவை வீழ்த்­து­வ­தற்கு அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஒரே அணி­யில் வர­வேண்­டும் எனத் தாம் விரும்­பு­வ­தாக லாலு பிர­சாத் யாதவ் கூறி­னார்.

காங்கிரசில் தலைவர் தேர்தல் முடிந்த பின் மீண்டும் சந்திக்கலாம் என சோனியா காந்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஹரியானா மாநிலம், பதேஹாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!