இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட 'பிஎஃப்ஐ' முறியடிப்பு நடவடிக்கை; 100க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட 'பிஎஃப்ஐ' முறியடிப்பு நடவடிக்கை; 100க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்

1 mins read

புதுடெல்லி: 'பிஎஃப்ஐ' எனப்படும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய மேலும் 100க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) இந்தியா முழுவதும் நடைபெற்ற இரண்டாம் கட்ட முறியடிப்பு நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

அந்த அமைப்புக்கு எதிராக இதுவே ஆகப் பெரிய முறியடிப்பு நடவடிக்கை என்று சொல்லப்பட்டு வருகிறது.

கர்நாடகம், குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைதுசெய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.