கடைவீட்டில் ஆடவரின் சடலம் 

ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ஒரு கடைவீட்டில் 29 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை (செப்டம்பர் 26) இந்த சம்பவம் நடந்தது. அந்த கடைவீட்டில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சின் மின் நாளிதழ் குறிப்பிட்டது.

வாரயிறுதியை முன்னிட்டு சென்ற வெள்ளிக்கிழமையன்று புதுப்பிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. பணியாளர்கள் வேலைக்கு மீண்டும் திங்கட்கிழமை சென்றபோது, ஆடவர் ஒருவரின் சடலத்தை கண்டனர். இது குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்தனர்.

மாண்டவரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்த காயங்கள் போன்று இருந்ததாகக் கூறப்பட்டது. மாண்டவர் தன்னுடைய ஊழியர் அல்ல என புதுப்பிப்பு நிறுவனம் கூறியது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்தததும், கடைவீட்டை பூட்டிச்சென்றதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை தொடர்கிறது.


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!