மது போதையில் சிகிச்சை: சிறுமி மரணம்

உத்தரப் பிரதேசத்தில் மது போதையில் இருந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்த ஒரு வயது குழந்தை மாண்டுள்ளது. சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக மாண்ட குழந்தையின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொண்டையில் சோளம் சிக்கிக்கொண்டதால், சிறுமி அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அந்நேரத்தில் பணியில் இருக்கவேண்டிய டாக்டர் தர்மேந்திரா குப்தா என்பவர் மருத்துவமனையில் இல்லையென்று பாதிக்கப்பட்ட குடும்பம் கூறியது. ஒரு மணிநேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், சிறுமி மாண்டதை தொடர்ந்து, சிறுமியின் தாயாரிடம் வேறு ஒரு பிள்ளையை பெற்றுகொள்ளமாறு டாக்டர் குப்தா கூறியதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டாக்டர் குப்தா பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!