இந்தியாவில் துப்பாக்கி தயாரிக்கும் அந்நிய நிறுவனம்

இந்தியாவில் துப்பாக்கி தயாரிக்கும் அந்நிய நிறுவனம்

1 mins read
03873b31-8374-47ad-a376-eb4cdeed0ea8
-

புதுடெல்லி: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, பாது காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் சாப் நிறுவன மானது, இந்தியாவில் கிளை பரப்புகிறது.

அந்நிறுவனம் தனது 'கார்ல்-குஸ்தாஃப் எம்4' வகை ஆயுதங்களை எதிர்வரும் 2024 முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யத் திட்ட மிட்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் கார்கென் ஜோஹன்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், இந்த நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

'கார்ல்-குஸ்தாஃப் எம்4' என்பது குறிப்பிட்ட வகை துப்பாக்கிகள் ஆகும். இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்காக இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன.

புதிய ஏற்பாடானது, துப்பாக்கி உற்பத்திக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இதைப் பயன்படுத்துவோருக்குத் தேவைப்படும் பாகங் களைத் தயாரிக்கவும் கைகொடுக்கும் என 'சாப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நட வடிக்கையை வேறு எந்த நாட்டிலும் மேற்கொண்ட தில்லை என்று கார்கென் ஜோஹன்சன் மேலும் குறிப்பிட்டார்.

உக்ரேன் மீதான ரஷ்யா வின் படையெடுப்பை அடுத்து, பல்வேறு உலக நாடுகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளன.