லக்னோ: ஆசிரியரால் தாக்கப்பட்ட தலித் மாணவன் உயிரிழந்ததை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் வன்முறை வெடித்தது.
அங்குள்ள அவுரியா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் தேர்வின் போது பாடப்புத்தகத்தில் இருந்த வார்த்தையைத் தவறாக உச்சரித்த தால் ஆசிரியர் கோபமடைந்துள்ளார்.
இதையடுத்து அம்மாணவனை ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனளிக்காமல் அவன் உயிரிழந்தான்.
இதையடுத்து, வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததை அடுத்து, காவல்துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
மாணவனைத் தாக்கிய ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறை தேடி வருகிறது.

