எட்டு மாநிலங்களில் சோதனை: பலர் கைது

எட்டு மாநிலங்களில் சோதனை: பலர் கைது

1 mins read
27de4a4a-f96d-4ab3-840e-49040798ce60
-

திரு­வ­னந்­த­புரம்: 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் தேசிய புல­னாய்வு அமைப்­பின் அதி­கா­ரி­கள் நேற்­றும் தீவிர சோதனை மேற்­கொண்­ட­னர்.

எட்டு மாநி­லங்­களில் நடை­பெற்ற சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது, நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கைதா­ன­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வியா­ழக்­கி­ழமை 15 மாநி­லங்­களில் 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பு­டன் தொடர்­புள்ள இடங்­களில் தேசிய புல­னாய்வு முகமை, அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நடத்­திய அதி­ர­டிச் சோத­னை­யின் போது நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு செய்­தது, நிதி வசூ­லித்­தது, மத மோதல்­களை ஊக்­கு­விக்க முயன்­றது உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, வளை­குடா நாடு­களில் இருந்து உண்டியல் முறை­யில் இந்த அமைப்பு நிதி வசூ­லித்­துள்­ளது. இதற்­காக, அபுதாபி நக­ரி­லுள்ள உண­வ­கத்­தைப் பயன்­படுத்தி உள்ள ­னர் என்று அம­லாக்­கத் துறை தெரி­வித்­துள்­ளது.