தன்னுடைய கருமை நிறத்தை பரிகாசம் செய்துவந்த தன்னுடைய கணவரை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார் 30 வயது மாது ஒருவர். இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
தனது தோலின் நிறத்தால் தனது கணவர் தன்னை அடிக்கடி மட்டம் தட்டி பேசியதாக சங்கீதா சொன்வானி எனும் பெண் குற்றஞ்சாட்டினார். இதனால் தனக்கு மனஅழுத்தமும் ஆழ்ந்த சோகமும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் காரணத்தினால் தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டபோது, கோடாரியால் கணவனை ஓங்கி வெட்டியுள்ளார் சங்கீதா. ஆடவர் அந்த இடத்திலேயே மாண்டதாகக் கூறப்பட்டது. அவரது ஆண் பிறப்புறுப்புகளையும் சங்கீதா வெட்டி வீசியுள்ளார்.
காவல் துறையினர் விசாரித்ததில் முதலில் வேறு யாரோ தனது கணவரை கொன்றுவிட்டதாக சங்கீதா கூறியுள்ளார். பின்னர் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு மீது சுமத்தப்பட்டுள்ளது.