ஒருவருக்கொருவருடைய கணவர்களுக்கு சிறுநீரகத்தை தானம் செய்த மனைவிகள்

ஒருவருக்கொருவருடைய கணவர்களுக்கு சிறுநீரகத்தை தானம் செய்த மனைவிகள்

1 mins read
bfd4ebae-05a0-4c07-92df-b2aa116651d4
படம்: இந்திய ஊடகம் -

அவினாஷ் யாதவ், சஞ்சீவ் எனும் இரு நபர்களுக்கும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருவரும் காத்திருந்தனர். தங்களது மனைவிகள் மம்தா யாதவ், ஜக்ஜித் கோர் ஆகியோர் தங்களுடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் அவர்களுடைய இரத்த பிரிவும் அவர்களது கணவர்களுடைய இரத்த பிரிவும் வேறுபட்டன.

இந்நிலையில், கணவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில், தங்கள் சிறுசீரகத்தை தானம் செய்ய முன்வந்தனர் இரு மனைவிகளும்.

மம்தாவின் இரத்த பிரிவு சஞ்சீவுடனும், ஜக்ஜித்தின் இரத்த பிரிவு அவினாஷ்டனும் ஒத்துபோனது. இருதரப்புகளும் ஒருவருக்கொருவருடைய கணவர்களுக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய ஒப்புதல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இருவருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவினாஷ், சஞ்சீவ், மம்தா, ஜக்ஜித் ஆகிய அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.