பெங்களூரில் ரூ.208 கோடி மதிப்பில் உந்துகணை இயந்திரத் தயாரிப்பு நிலையம்

பெங்களூரில் ரூ.208 கோடி மதிப்பில் உந்துகணை இயந்திரத் தயாரிப்பு நிலையம்

1 mins read
aec312f1-fbf7-4b89-a84c-7a18806780ea
-

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரில் 208 கோடி ரூபாய் (36 மில்லியன் வெள்­ளிக்­கு­மேல்) செல­வில் அமைக்­கப்­பட்­டுள்ள புதிய உந்­து­கணை இயந்­தி­ரத் தயா­ரிப்பு நிலை­யத்தை அதி­பர் திரௌ­பதி முர்மு திறந்து வைத்­துள்­ளார்.

'கிரை­யோ­ஜெ­னிக்' எனும் தாழ்­வெப்­ப­நி­லை­யைப் பயன்­ப­டுத்தி இயந்­தி­ரங்­க­ளைத் தயா­ரிக்­கும் முறையை இந்த நிலை­யம் பின்­பற்­று­கிறது.

இஸ்‌ரோ எனப்­படும் இந்­திய விண்­வெளி ஆராய்ச்­சிக் கழ­கம், பெங்­க­ளூரு எச்­ஏ­எல் நிறு­வன வளா­கத்­தில் 4,500 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் இந்­நி­லை­யத்தை அமைத்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிலை­யத்­தின் திறப்பு விழா­வில், கர்­நா­டக மாநில ஆளு­நர் தாவர்­சந்த் கெலாட், முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை உள்­ளிட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

'ராக்­கெட்' எனப்­படும் உந்­து­கணை­க­ளுக்­கான 'கிரை­யோ­ஜெனிக்' இயந்­தி­ரத்­தின் தயா­ரிப்­பில், இந்­தியா தற்­சார்பு நிலையை அடைய இஸ்­ரோ­வும் எச்­ஏ­எல் நிறு­வ­ன­மும் மேற்­கொண்ட முயற்­சியை அதி­பர் முர்மு தமது உரை­யில் பாராட்­டி­னார்.

இந்த நிலை­யத்­தில் 70 உயர்­தொ­ழில்­நுட்ப இய­‌ந்­தி­ரங்­களும் சோத­னைக் கரு­வி­களும் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இஸ்‌ரோ தெரி­வித்­தது.

இது­வரை, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஜப்­பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடு­களில் மட்­டுமே 'கிரை­யோ­ஜெ­னிக்' இயந்­தி­ரங்­க­ளைத் தயா­ரிக்­கும் நிலை­யங்­கள் இயங்கி­வந்­துள்­ளன. இத்­த­கைய சிறப்­பு­டைய ஆறா­வது நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது.

அடுத்த நான்கு ஆண்­டு­களில் 'கிரை­யோ­ஜெ­னிக்' இயந்­தி­ரங்­களுடன் கூடிய பிஎஸ்­எல்வி உந்து­க­ணை­க­ளைத் தயா­ரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்­பில், எச்­ஏ­எல், எல் அண்ட் டி ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் ரூ.860 கோடி மதிப்­பி­லான ஒப்­பந்­தங்­கள் செய்­து­கொள்­ளப்­பட்­ட­தாக இஸ்‌ரோ தெரி­வித்­தது.