லக்கீம்பூர் கெரி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் தருஹெரா பகுதியில் இருந்து நேற்று லக்னோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் மோசமாகக் காயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தோர் அனைவரும் லக்னோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

