ஹல்த்வானி: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையின் நிர்வாகம் விந்தையான ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்கீழ், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ரூ.500 செலுத்தினால், ஒரு பகல், ஓர் இரவு சிறைச்சாலையில் கைதிகள்போலத் தங்கியிருக்கலாம். கைதிகளுக்கான ஆடைகளும் அங்குள்ள உணவுக்கூடத்தில் தயாரான உணவும் வழங்கப்படும்.
முதலில் சோதிட ரீதியில் சிறை செல்லக்கூடுமெனக் கூறப்பட்டதால் கலங்கியோருக்காக இதைத் திட்டமிட்ட அதிகாரிகள், தற்போது பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

