மறைந்த திரையிசைப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி

மறைந்த திரையிசைப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி

1 mins read
c179eeaf-102f-441f-947e-59e543b4792e
லதா மங்கேஷ்கர் சவுக் சாலைச் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள 40 அடி வீணை. படம்: இந்திய ஊடகம் -

அயோத்தி: மறைந்த திரை­யி­சைப் பாடகி லதா மங்­கேஷ்­க­ரின் 93வது பிறந்­த­நாளை ஒட்டி அவர் நினை­வைப் போற்­றும் வித­மாக, உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் அயோத்தி நக­ரில் 40 அடி நீளத்­தில் வீணை­யின் சிலை நிறு­வப்­பட்­டுள்­ளது. இதன் எடை 14 டன்.

நக­ரின் முக்­கிய சாலைச் சந்­திப்­பில் அமைந்­துள்ள இந்­தச் சிலை­யைப் பிர­த­மர் நரேந்­திர மோடி காணொளி வாயி­லா­கத் திறந்து வைத்­தார்.

சகோதரி லதா மங்­கேஷ்­கரை அவ­ரது பிறந்­த­நா­ளில் நினை­வு­கூர்­வ­தா­கக் கூறிய திரு மோடி, அயோத்­தி­யில் ஒரு சாலைக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­படும் என்­றும், இந்­தி­யா­வின் அடை­யா­ளங்­களில் ஒன்­றா­கக் கரு­தப்­படும் பாட­கிக்கு இது சிறந்த அஞ்­ச­லி­யாக இருக்­கும் என்­றும் கூறி­னார்.

மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், லதா மங்­கேஷ்­கர் சவுக் எனப்­படும் சாலைச் சந்­திப்­பைத் திறந்­து­வைத்­தார். மத்­திய சுற்­று­லாத் துறை அமைச்­சர் ஜி. கிஷன் ரெட்டி கலந்­து­கொண்ட இந்நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் மோடி காணொளி வாயி­லா­கக் கலந்­து­கொண்­டார்.