தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய உச்சநீதிமன்றம்: இந்தியாவில் எல்லாப் பெண்களுக்கும் கரு கலைக்கும் உரிமை உள்ளது

1 mins read
97b3c364-e541-4749-a430-2ca702fa2a7a
கோப்புப் படம்: இணையம் -

இந்தியாவில் திருமணம் ஆன, திருமணமாகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பு உரிமை இருக்கிறது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

எந்த சூழலில் யாருக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் தொடர்பிலான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

அதன்படி, கருக்கலைப்பு செய்து கொள்ள எல்லா பெண்களுக்கும் உரிமை உண்டு, தகுதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாத பெண்களும் திருமணம் ஆன பெண்களும் அவர்களில் அடங்குவர்.

கருக்கலைப்பிற்கான உரிமை திருமணத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கும் என்ற ஒரு நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.