துருக்கிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் 'பிஎஃப்ஐ'

துருக்கிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் 'பிஎஃப்ஐ'

3 mins read
bf531950-0e1f-460c-91e2-aa9971f6d2c7
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தடை­செய்­யப்­பட்­டி­ருக்­கும் 'பிஎஃப்ஐ' எனப்­படும் பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா அமைப்­பி­னர், துருக்­கி­யில் செயல்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

'ஐஎச்­எச்' எனப்­படும் மனித உரி­மை­கள், மனி­த­நேய நிவா­ர­ணப் பணி­கள் ஆகி­ய­வற்­றுக்­கான அமைப்பு, துருக்­கி­யில் செயல்­படும் மனித உரி­மைக்­கான அமைப்­பா­கத் தன்னை முன்­னி­லைப்­ப­டுத்­திக் கொள்­கிறது. ஆனால் அதற்கு அல்­காய்தா பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்பு இருப்­ப­தா­க­வும் 2014ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் சிரி­யா­வில் இருந்த பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஆயு­தங்­களை அது கடத்­தி­ய­தா­க­வும் புல­னாய்­வுத் துறை­யி­னர் கூறு­கின்­ற­னர்.

'ஐஎச்­எச்' அமைப்பு, 'பிஎ­ஃப்ஐ' அமைப்­பின் தேசிய நிர்­வா­கக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் இஎம்.அப்­துல் ரகு­மான், பி. கோயா இரு­வ­ரை­யும் இஸ்­தான்­புல்­லுக்கு அழைத்து உப­ச­ரித்­த­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. 'நோர்­டிக் மானிட்­டர்' எனும் கண்­கா­ணிப்­புக் குழு இத­னைத் தெரி­வித்­தது.

துருக்­கி­யில் 2016ஆம் ஆண்டு தோல்­வி­யில் முடிந்த ஆட்­சிக் கவிழ்ப்பு நட­வ­டிக்­கை­யின்­போது, அந்­நாட்டு அர­சாங்­கச் செய்தி நிறு­வ­னம், 'பிஎ­ஃப்ஐ' அமைப்பை இந்­திய சமூ­கக் குழு என்­றும் இதன் உறுப்­பி­னர்­க­ளைக் காவல்­து­றை­யி­னர் துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்­ததை 'நோர்­டிக் மானிட்­டர்' கண்­கா­ணிப்­புக் குழு சுட்­டிக்­காட்டியது.

இதற்­கி­டையே, இம்­மா­தம் 22ஆம் தேதி நாடு முழு­வ­தும் 'பிஎஃப்ஐ' அமைப்­பு­டன் தொடர்பு உடைய இடங்­களில் சோதனை நடத்­து­வ­தற்கு முன்பு, கடந்த 17ஆம் தேதி தேசி­யப் பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவ­லும் உள­வுத்­துறை­யின் முக்­கிய அதி­கா­ரி­களும் நாட்­டின் முக்­கிய முஸ்­லிம் அமைப்­பு­களின் தலை­வர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'பிஎ­ஃப்ஐ' அமைப்­புக்கு மத்­திய அரசு தடை விதித்­ததை சூபி மற்­றும் பரெல்வி மத­கு­ரு­மார்­கள் வர­வேற்­றுள்­ள­னர். "தீவி­ர­வா­தச் செய­லைத் தடுக்க, சட்­டப்­படி மத்­திய அரசு தடை விதித்­துள்­ளது. எனவே அனை­வ­ரும் அமை­தி­காக்க வேண்­டும். இந்த விவ­கா­ரத்­தில் மத்­திய அர­சின் நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது," என்று அனைத்­திந்­திய சூபி சஜ்­ஜ­த­னா­ஷின் மன்­றத் தலை­வர் கூறி­யி­ருக்­கி­றார்.

அஜ்­மீர் தர்­கா­வின் ஆன்­மி­கத் தலை­வர் ஜைனுல் அபி­தின் அலி கான், "மத்­தி­ய­அ­ர­சின் நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது. நாட்­டைப் பிளவு­ப­டுத்­தவோ ஒற்­றுமை, இறை­யாண்மை, அமைதி ஆகி­ய­வற்­றைச் சீர்­கு­லைக்­கவோ முயல்­வோ­ருக்கு இங்கு வாழும் உரிமை இல்லை," என்­றார்.

அனைத்து இந்­திய முஸ்­லிம் ஜமாத் தலை­வர் மவு­லானா ஷஹா­பு­தீன் ரஸ்வி பரெல்வி, "தீவி­ர­வாதச் செய­லைத் தடுக்க மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அர­சின் நட­வ­டிக்கை சரி­யா­னது," என்று கூறி­யுள்­ளார்.

இவ்­வே­ளை­யில், மத்­திய அர­சின் நட­வ­டிக்­கையை அடுத்து கேர­ளா­வில் 'பிஎ­ஃப்ஐ' அமைப்­பைக் கலைத்­து­விட்­ட­தாக அதன் பொதுச்­செ­ய­லா­ளர் அப்­துல் சத்­தார் அறி­வித்­துள்­ளார். அவர், கரு­நா­கப்­பள்­ளி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் கைது­செய்­யப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் தடை­யுத்­த­ரவை செயல்­ப­டுத்­தும் வித­மாக தமி­ழக அரசு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. அந்த வகை­யில், தமி­ழ­கத்­தின் 12 மாவட்­டங்­களில் உள்ள துணை ஆணை­யர்­கள் முழு விழிப்பு நிலை­யில் இருக்­கும்­ப­டி­யும் சென்னை முழு­வ­தும் நாலா­யி­ரம் காவல்­து­றை­யி­ன­ரைப் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­த­வும் காவல்­துறை ஆணை­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார். தமி­ழ­கத்­தில் 'பிஎ­ஃப்ஐ' அமைப்­புக்­குத் தடை­ விதித்து தமி­ழக அரசு அதி­கா­ர­பூர்வ அர­சா­ணையை வெளி­யிட்­டுள்­ளது.

'பிஎ­ஃப்ஐ' மீது நாடு முழு­வ­தும் 1400க்கும் மேற்­பட்ட குற்­ற­வி­யல் வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். 'பிஎ­ஃப்ஐ' அமைப்­பின் இணை­யத்­த­ளம் நேற்று முன்தினம் முடக்­கப்­பட்ட நிலை­யில், அதன் டுவிட்­டர் பக்­கம் நேற்று நீக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்பட்டது.