இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, மகாராஷ்டிர மாநிலத்தின் பந்தவ்கார்ஹ் புலிகள் காப்பிடத்தில் மேற்கொண்ட ஆய்வில்
26 கோயில்கள், 26 குகைகள், 2 பௌத்த மடாலயங்கள், 2 ஸ்தூபிகள், 24 கல்வெட்டுகள், 46 சிற்பங்கள், 19 நீர்நிலைகள் ஆகியவற்றுடன் சில சிதைவுகளையும் கண்டுபிடித்துள்ளது. ஏறக்குறைய 170 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மாதத்துக்கும்மேல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1938ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் முதல்முறையாக இடம்பெற்ற இந்த ஆய்வில் அஜந்தா காலத்திய குகை ஓவியங்களும் 2ஆம் நூற்றாண்டுக்கும் 5ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சிற்பங்கள், கோயில்கள் உள்ளிட்டவையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. படங்கள்: இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை

