ரூ.25 கோடி போலி நோட்டு; காவல்துறை விசாரணை

ரூ.25 கோடி போலி நோட்டு; காவல்துறை விசாரணை

1 mins read
42fefd44-14aa-4708-9290-4c7f03fcb96e
-

காந்­தி­ந­கர்: குஜ­ராத் மாநி­லத்­தில் மும்பை சாலை­யில் நோயா­ளி­இன்றி வேக­மாக வந்த மருத்­துவ வாக­னத்தை வாகன தணிக்கை அதி­கா­ரி­கள் சோதித்­த­போது அதில் ரூ.258 மில்­லி­யன் (25 கோடியே 80 லட்­சம்) மதிப்­பி­லான ரூ.2,000 நோட்­டு­கள் இருந்­தன.

அவை அனைத்­தும் போலி நோட்­டு­களாகத் தெரி­ய­வந்­ததை அடுத்து காவல்­துறை விசா­ரணையை முடுக்கிவிட்­டுள்­ளது.

ரிசர்வ் வங்கி என்­ப­தற்கு பதில், ரிவர்ஸ் வங்கி என்று அதில் பதிவு செய்­யப்­பட்­டு உள்­ளது.

மேலும், ரூபாய் நோட்­டு­கள் அனைத்­தி­லும் இது திரைப்­பட படப்­பி­டிப்­பிற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் ரூபாய் என்று அச்­சி­டப்­பட்டு இருந்­தது. என்­றா­லும் அந்­தப் போலி ரூபாய் கட்­டு­கள் எங்­கிருந்து, எங்கே கொண்டு செல்­லப்­பட்­டன என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை.

இந்த நிலை­யில், அதி­கா­ரி­கள் பல கோணங்­களி­லும் தீவி­ரமாக விசா­ர­ணை நடத்தி வருவதாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.