பணவீக்கம்: நான்காவது முறையாக வட்டி விகிதம் கூடியது

புது­டெல்லி: இந்­தி­யா­வின் மத்­திய வங்கி, பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­படுத்­தும் முயற்­சி­யாக, வங்­கி­க­ளுக்­கான குறு­கிய கால கட­னுக்­கான வட்டி விகி­தத்தை 5.4%லிருந்து 5.9% ஆக உயர்த்­தி­யது.

மத்­திய வங்கி இத்­து­டன் நான்­கா­வது முறை­யாக வட்டி விகி­தத்­தைக் கூட்டி உள்­ளது.

இதன் விளை­வாக வீடு, வாகன கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தம் மேலும் உய­ரும் என்று கணக்­கிடப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, இந்­தி­யப் பொரு­ளி­யல் இந்த ஆண்டு 7%தான் வள­ரும் என்­றும் மத்­திய வங்கி கணித்­துள்­ளது. அந்த வளர்ச்சி 7.2% இருக்­கும் என்று இந்த வங்கி முன்பு அறி­வித்­தது.

வட்டி விகித அதி­க­ரிப்பு பற்றி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்தி காந்­த­தாஸ், இந்­தியப் பொருளியல் தொடர்ந்து மீட்புத்திறன் கொண்­ட­தாக இருக்­கிறது என்­றார்.

உலக அள­வி­லான அர­சி­யல் சூழல், நிதிச் சந்­தை­யில் உள்ள நிச்­ச­ய­மற்ற தன்­மை­யால் பண­வீக்கம் அதி­க­ரித்­து உள்­ள­தா­க­வும் நாட்டின் பண­வீ­க்­கம் இப்போது 7% ஆக உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

இந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் பண­வீ­க்­கம் 6% இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!