நவீன விரைவு ரயிலில் பிரதமர்

நவீன விரைவு ரயிலில் பிரதமர்

1 mins read
459206a9-86a1-4107-96b7-996dbf75896a
பிரதமர் மோடி வந்தே பாரத் விரைவு ரயிலில் பலரோடும் உரையாடி பயணம் செய்தார். படம்: இந்திய ஊடகம் -

காந்­தி­ந­கர்: இந்­திய பிர­த­மர் நரேந்திர மோடி, தமது குஜ­ராத் பய­ணத்­தின் இரண்­டா­வது நாளான நேற்று நவீன தொழில்­நுட்­பங்­க­ளு­டன் கூடிய 'வந்தே பாரத்' விரைவு ரயிலை கொடி­யசைத்து தொடங்கி வைத்­தார்.

காந்­தி­ந­கர்-மும்பை இடையே இயங்­கும் அந்த ரயி­லில் பல­த­ரப்பு மக்­க­ளு­டன் உரை­யா­டி­ய­படி அவர் பய­ணம் செய்­தார்.

விமா­னங்­களில் காணப்­படும் வச­தி­களை ஒத்த அதி­ந­வீன வசதி­க­ளு­டன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் வரி­சை­யில் இந்த ரயில் சேவை மூன்­றா­வது ஆகும்.

திரு மோடி, பிறகு ரூ.7,200 கோடி மதிப்­பி­லான பல திட்­டங்­களை­யும் தொடங்­கி­வைத்­தார்.

அதையடுத்து அக­ம­தா­பாத் நக­ரில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்­டத்­தின் முதல் கட்­டத்தைப் பிர­த­மர் கொடி அசைத்து தொடங்கி வைத்­தார்; பொதுக் கூட்­டத்­தி­லும் உரை­யாற்­றி­னார்.