மும்பையில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

மும்பையில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

1 mins read
a63c2656-3b3c-4746-b97a-cbb20bca3071
-
Google News Preferred Icon

மும்பை: நள்ளிரவில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் மும்பையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மும்பையில் நேற்று முன்தினம் இரவு கண்டிவலி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இந்தத் திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் மூவர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய வர்களுக்கும் கொல்லப் பட்டவருக்கும் இடையே இருந்த முன்விரோதமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.