இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

1 mins read
e5c8f4fb-372b-47ce-81c7-c01fe8faa764
-

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வில் இயங்கி வரும் திபா­லாஜி பெட்­ரோ­கெம் என்ற தனி­யார் பெட்­ரோ­லிய நிறு­வ­னத்­துக்கு அமெ­ரிக்கா திடீர் தடை விதித்­துள்­ளது.

ஈரான் மீதான பல்­வேறு பொரு­ளி­யல் தடை­களை மீறி இந்த நிறு­வ­ன­மா­னது, அந்­நாட்­டி­டம் இருந்து எண்­ணெய் பொருள்­களை வாங்கி உள்­ளது என்­பது அமெ­ரிக்­கா­வின் புகார் ஆகும்.

மேலும், ஈரான் எண்ணெய் பொருள்களைப் பெற்று சீனாவுக்கு விற்பனை செய்ததாகவும் இந்திய நிறுவனத்தின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே இந்திய நிறுவனம் ஒரு தரகரைப் போல் செயல்பட்டதாக தெரிய வந்ததை அடுத்து, இந்த அதிரடித் தடையை விதிப்பதாகவும் இதை இந்திய அரசுக்கு எதிரான தடையாகப் பார்ப்பது சரியல்ல என்றும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.