காஷ்மீரில் சிறைத் தலைவர் கொலை; வேலைக்காரர் கைது

காஷ்மீரில் சிறைத் தலைவர் கொலை; வேலைக்காரர் கைது

2 mins read
5b3632ba-9269-4b0a-8eb4-81544e779461
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் வருகை அளித்து இருப்பதையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. படம்: இபிஏ -

அமைச்சர் அமித்ஷா வருகையின்போது சம்பவம்; தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்பு

ஸ்ரீந­கர்: இந்­தியா வசம் உள்ள காஷ்­மீ­ரில் சிறைச்­சாலை தலைமை அதிகாரி ஒரு­வர் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.

உள்­துறை அமைச்­சர் அமித் ஷா திங்­கட்­கி­ழமை முதல் புதன்­கி­ழமை வரை அந்த மாநி­லத்­திற்கு வருகை அளித்து இருக்­கும் வேளை­யில், இந்­தப் படு­கொலை நிகழ்ந்து இருக்­கிறது.

ஹெர்­மண்ட் குமார் லோகியா, 57, என்ற அந்த உயர் அதி­காரி, ஸ்ரீந­கர் வட்­டா­ரத்­தின் சிறைச்­சாலைத் துறை தலைமை இயக்கு நராக பணி­யாற்றி வந்­தார்.

அவர் தனது வீட்­டில் திங்­கட்­கி­ழமை இரவு கழுத்து அறு­பட்ட நிலை­யில் மாண்­டு­கி­டந்­தார். உட­லில் தீப்­புண்­கள் காணப்­பட்­டன.

அந்த அதி­கா­ரி­யின் மர­ணத்­தை­யொட்டி அவர் வீட்­டில் வேலை செய்த யாசிர் லோகார், 23, என்­பவர் கைதாகி இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அதே­வே­ளை­யில், அந்த அதி காரியைக் கொலை செய்­தது தானே என்று இஸ்­லா­மிய தீவிரவாத அமைப்பு ஒன்று தெரி­வித்­தது.

'பிஏ­எ­ஃப்­எஃப்' என்ற அந்த அமைப்பு, சமூக ஊட­கத்­தில் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

"இது ஒரு தொடக்­கம் தான். இந்­தக் கொலை காஷ்­மீ­ருக்கு மூன்று நாள் வருகை அளித்து உள்ள உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவுக்கு ஒரு சிறிய அன்­ப­ளிப்பு," என்­றும் அந்த அமைப்பு கூறி­யது.

என்­றா­லும் அந்த அறிக்­கையை வெளி­யிட்­டது அந்த அமைப்­பு­தானா என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் நேற்று குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, ஜம்மு காஷ்­மீர் சென்­றி­ருக்­கும் அமித்ஷா, நேற்று ரஜோரி மாவட்­டத்­தில் பொதுக்­கூட்­டத்­தில் பேசினார்.

பிர­த­மர் மோடி ஆட்­சி­யில் பாது­காப்புப் படை­யி­னர் உயி­ரி­ழப்­பது குறைந்து வரு­கிறது என்­றும் சிறப்பு சட்­டம் நீக்­கப்­பட்­ட­தன் மூலம், தாழ்த்­தப்­பட்­டோர், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மலைப் பிரதே­ச மக்களுக்கு இட ஒதுக்­கீட்டுப் பலன்­கள் கிடைத்­துள்­தா­க­வும் அவர் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், ஜம்மு காஷ்­மீரின் பல பகு­தி­களில் இணை­யச் சேவை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ள­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.