தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

11 கோடி புதிய கழிவறைகள்; 60 கோடி மக்கள் மாறினர்

1 mins read
b22cd707-3e55-40e0-8d1c-055776105703
-

புது­டெல்லி: இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஆட்­சியைப் பிடித்த பாஜக, அதே ஆண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் 'தூய்மை இந்­தியா' திட்­டத்தைத் தொடங்­கி­யது.

அத்­திட்­டம் தொடங்கி ஒன்பது ஆண்டு­கள் ஆகின்­றன. இதை முன்­னிட்டு புது­டெல்­லி­யில் நடந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அதி­பர் திரவு­பதி முர்மு, இந்தத் திட்­டத்­தின் கீழ் நாடு முழு­வ­தும் இது­வரை 11 கோடி கழி­வ­றை­கள் கட்­டப்­பட்டுள்­ளன. இத­னால் 60 கோடிக்­கும் மேற்­பட்­டோர் திறந்­த­வெளி யில் மலம் கழிக்­கும் பழக்கத்தைக் கைவிட்டு உள்­ள­னர் என்­றார்.

தூய்மை இந்­தியா திட்­டத்­தின் 2-வது கட்­டத்தை மத்­திய அரசு அமல்­ப­டுத்தி வரு­கிறது. இதன்­படி நாட்­டில் உள்ள ஆறு லட்­சம் கிரா­மங்­க­ளி­லும் 100% கழி­வ­றை­களை கட்­டித் தர இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டில் உள்ள அனைத்து குடி­யி­ருப்­பு­க­ளுக்­கும் 2024-க்குள் குழாய் மூலம் சுத்­த­மான குடி­நீர் வழங்க மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது என்று அவர் தெரி­வித்­தார்.