இணையத்தள மோசடி: 12 பேர் சிக்கினர்

இணையத்தள மோசடி: 12 பேர் சிக்கினர்

1 mins read
b39321da-b230-445e-b7e2-e10a94b5f4e1
-

புதுடெல்லி: முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி இணையத்தளங்கள், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக 12 பேர் கைதாகி உள்ளனர்.

இது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, முதற்கட்டமாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லி, பீகாரைச் சேர்ந்த எழுவரைக் கைதுசெய்தது.

இதேபோல் மற்ற மாநிலங்களிலும் மோசடி நடப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த நூதன மோசடி குறித்து அனைத்து மாநில காவல் துறைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இயங்கி வரும் வேறு சில நிறுவனங்களும் இதே போன்ற மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறையிடம் புகார்கள் அளித்தன.

அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது மேலும் ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.