உருவானது புதிய புயல் சின்னம்

உருவானது புதிய புயல் சின்னம்

2 mins read
c67cbaa5-c975-4c8a-afc1-5ca45567752f
ஹைதராபாத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் அங்கு சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கி நிற்பதால் வாகன மோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.படம்: ஊடகம் -

நாடு முழுவதும் நீடிக்கும் மழை; வடமாநிலங்களில் 13 பேர் பலி

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் கன­மழை பெய்து வரு­கிறது. வடக்கு தொடங்கி தெற்கு வரை பல மாநி­லங்­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்­மைய சில நாள்­க­ளாக நாட்­டின் தலை­ந­கர் புது­டெல்லி தொடங்கி, வடஇந்தியாவின் பல்­வேறு பகு­தி­களை கன­மழை புரட்­டிப்­போட்டு வரு­கிறது.

வட­மேற்கு மாநி­லங்­க­ளான உத்­தரகண்ட், உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான் மாநி­லங்­களில் பலத்த மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. இம்­மா­நி­லங்­களில் பொது மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்­லி­யி­லும் உத்­த­ரகண்ட் மாநி­லத்­தி­லும் மழை­நீர் ஆங்­காங்கே தேங்கி நிற்­ப­தால் போக்­கு­வ­ரத்து கடு­மை­யா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

தென்மாநி­லங்­க­ளைப் பொறுத்­த­வரை, தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கன­ம­ழைக்கு வாய்ப்­புள்­ள­தா­க­வும் தெலுங்­கா­னா­வுக்கு கன­ம­ழைக்­கான மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அம்­மை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கர்­நா­ட­கா­வி­லும் கடந்த சில நாள்­க­ளா­கப் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது.

இதற்­கி­டையே வட­த­மி­ழ­கம், புது­வையை ஒட்­டி­ய கடற்­ப­கு­தி­யில் புயல் சின்­னம் உரு­வாகியுள்­ள­து என்றும் அதன் காரணமாக தெலுங்­கானா, வடக்கு மத்­தி­யப் பிர­தே­சத்­தில் உள்ள பகு­தி­களில் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு மழை நீடிக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய புயல் சின்­ன­மா­னது, தெலுங்­கானா மாநி­லத்­தில் தெற்கு, கிழக்கு மாவட்­டங்­களை நோக்கி நகர்ந்து வரு­வ­தால், கன­ம­ழைக்­கான மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், வட இந்­தி­யா­வில் இம­ய­ம­லை­யின் வட­மேற்­குப் பகு­தி­க­ளுக்­கும் இதே எச்­ச­ரிக்கை பொருந்­தும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தே­சம், உத்­த­ரா­கண்ட் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­களில் மழை தொடர்­பான வெவ்­வேறு சம்­ப­வங்­களில் இது­வரை 13 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

டெல்­லி­யில் பெய்து வரும் பலத்த மழை­யால் ஒரு நன்­மை­யும் விளைந்­துள்­ளது. மழைப்­பொ­ழி­வால் அங்கு காற்று மாசு குறைந்­துள்­ளது. கடந்த இரண்டு ஆண்­டு­களில் முதன் முறை­யாக டெல்­லி­யில் காற்று மாசு ஆகக்­கு­றை­வா­கப் பதி­வா­னது. மேற்கு வங்­கம், சிக்­கிம், அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம், அசாம், மேகா­லயா உள்­ளிட்ட மாநி­லங்­களி­லும் இன்று இரவு வரை கன மழை நீடிக்­கும் என்­றும் ஒடிசா, பீகார் மாநிலங்­களில் மித­மான மழைப்­பொழிவு இருக்­கும் என்­றும் வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.