விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்களுக்கான இரவுத் திருவிழா

விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்களுக்கான இரவுத் திருவிழா

1 mins read
cab3dc87-2459-4205-a839-02ddb35b8227
-

திருவனந்தபுரம்: பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரளாவில் இரவுத்திருவிழா நடைபெற்றுள்ளது.

அங்குள்ள மூவாற்றுப்புழா பகுதியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மூவாற்றுப்புழா எம்எல்ஏ மேத்யூ செய்திருந்தார்.

கடந்த 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தினமும் மாலை 5.30 முதல் இரவு 11.30 மணி வரை திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

பெண்கள், சிறுமிகளின் ஊர்வலம், ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதாக எம்எல்ஏ மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"பெண்களைக் கூண்டில் அடைத்து வைப்பதுபோல் செயல்படக்கூடாது. அவர் களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அலுவல், பணி நிமித்தமாக இரவில் வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.

"பெண்களுக்கு சமூகத்தின்மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இத்திரு விழா நடத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட வேண்டும்," என்றார் எம்எல்ஏ மேத்யூ.

திருவிழாவின்போது நடனம், உணவுத் தயாரிப்பு, தற்காப்புக் கலை பயிற்சிகளும் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.