பெங்களூரு: வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால் பெங்களூரு நகரம் தனது பசுமையை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சாலை விரிவாக்கத்துக்காக பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

